காங்கிரஸை காட்டிலும் கம்யூனிஸ்ட்கள் தான் தனக்கு ஆபத்து என்பதை தெளிவாகவே உணர்ந்திருக்கின்றனர் காவிகள். அதிகாரத்திற்கான போட்டியில் காவிகளோடு ஒப்பிடுகையில் கம்யூனிஸ்ட்கள் வலுவாக இல்லை என்பது நிதர்சனம். ஆனால் தங்களின் அடிப்படை கொள்கைகளை செயல்படுத்த விடாமல் துவம்சம் செய்து விடுவார்கள், தற்போதும் அதை செய்கிறார்கள் என்றே காவிகள் அஞ்சுகின்றனர்.
எனவே தான் கேரளாவை நோக்கி சகல ஆயுத்த்தையும் திருப்புகிறான். ஆனால் கடைசியில் தோல்வியே மிச்சம். அவர்களை எதிர்கொள்ளும் வலு இயற்கையிலேயே உண்டு.அவர்கள் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை முடிவு செய்வது காவிகள் கையில் தான் இருக்கிறது.
ஆனால், இந்த விசயத்தில் காவிகளை எதிர்க்கும் மற்ற கட்சிகள் வேடிக்கை பார்த்திருக்காமல் இடதுசாரிகளோடு இணைந்து களம் காணவேண்டும். நான சொல்வது தற்போது நடக்கும் யுத்த களத்தை.
நீங்கள் மவுனமாக வேடிக்கை பார்த்தால் வரும் நாட்களில் இழப்பு உங்களுக்கு தான்.
இது தமிழகத்தின் திராவிட இயக்கங்களுக்கும் பொருந்தும்.

Leave A Reply