உடுமலை, அக்.11-
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவரை நியமனம் செய்திடக்கோரி பள்ளபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலையை அடுத்த பள்ளபாளையம் ஊராட்சி கொங்கலக்குறிச்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவரை நியமனம் செய்திட வேண்டும். ஊராட்சி பகுதி முழுவதும் நிலவும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்திட வேண்டும். குடிநீர் பிரச்சணைக்கு தீர்வு காண வேண்டும். பள்ளாபளையம் வேளாண் கூட்டுறவு வங்கியில் கடன் மற்றும் உரம் உள்ளிட்ட விவசாய தேவைகளுக்கு வரும் விவசாயிகளை வேண்டும் என்றே அலைகழித்து அவமானப்படுத்தும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கொங்கலக்குறிச்சியில் கட்டி முடிக்கபட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியை பயன்பாட்டிக்கு கொண்டு வந்து புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று பள்ளபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்திற்கு பள்ளபாளையம் கிழக்கு கிளையின் செயலாளர் ரத்தினகுமார் தலைமை தாங்கினார். பள்ளபாளயம் மேற்குகிளையின் செயலாளர் சிவக்குமார்( எ ) ரஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலளர் கி.கனகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். ஜெகதீசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: