தில்லி,

இந்திய ராணுவத்தில் 3 நாட்களுக்கு ஒரு ராணுவ வீரர் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரம் ஒன்று வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சக தரவுகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல் படி, 2014 ஜனவரி முதல் 2017 மார்ச் இறுதி வரையிலான 1,185 நாட்களில் 348 ராணுவ வீரர்கள் பணியின் போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூரங்களில் பணியமர்த்தப்பட்டு, நீண்ட காலமாக தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்வதாகவும், இதற்கு காரணம் வீடு செல்ல முடியாத ஏக்கம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்சமாக கடற்படையில் 12 வீரர்களும் அதிகப்பட்சமாக தரைப்படையில் 276 வீரர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Leave A Reply