சோனிபட்;
ஹரியானா மாநிலம் சோனிபட் திரையரங்க வளாகத்தில் 1996-ம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக லஷ்கர்-இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் துண்டா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது சோனிபட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

அதன்முடிவில் துண்டாவை குற்றவாளி என்று நேற்று   தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது. அப்போது, அப்துல் கரீம் துண்டாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து சோனிபட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: