புதுடெல்லி

அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய கப்பல் மாலுமி பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மணீஷ் குமார் கிரி. 25 வயதான இவர், கடந்த 2010-ம் ஆண்டு விசாகப்பட்டினம் ஐ.என்.எஸ். இக்ஸிலா கப்பற்படை தளத்தில் மாலுமியாக பணியில் சேர்ந்தார்.

இவருக்கு பெண்ணாக மாறுவதில் விருப்பம் இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில்
கடந்த வருடம் விடுமுறையில் சென்ற மணீஷ் கிரி, மீண்டும் பணியில் சேர்ந்திருக்கிறார். பணி நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் பெண்கள் போல் உடையணிந்து அலங்காரம் செய்வதில் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். இதுகுறித்து மணிஷ்சிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.  விசாரணையில் மணீஷ் விடுமுறைக்காக மும்பை சென்ற போது அங்குள்ள ஒரு மருத்துமனையில், பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து.  மணிஷை பணி நீக்கம் செய்து வெளியேற்றியிருக்கின்றனர்.

இது குறித்து மணீஷ் குமார் கிரி கூறியிருப்பதாவது: தான் விருப்பபட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.  என்ணை  திருடன் ? பயங்கரவாதி போன்று குற்றம் செய்ததாக பார்க்கிறார்கள்.  பெண்ணாக மாறியது தவறா?   கடந்த 7 வருடங்களாக நாட்டுக்காக உழைத்திருக்கிறேன். ஆனால் என் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஐஎன்எஸ் நிர்வாகம் என்னை பணிநீக்கம் செய்திருக்கிறது. இதனை எதிர்த்து நான் நீதிமன்றம் செல்வேன். அங்கு நியாயம் கிடைக்கும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: