ஈரோடு,அக்.9-
பழங்குடியின மக்களுக்கு அரசு நிதியில் கழிவறை வசதிகளுடன் வீடு கட்டித்தரக்கோரி பழங்குடியின மக்கள் வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். பூம் பூம் பழங்குடியின மக்கள் 37 குடும்பங்களுக்கு தலா 2 செண்ட் நிலம் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலத்தில் பழங்குயினருக்காக அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் 37 குடும்பங்களுக்கும் கழிவறை வசதியுடன் கூடிய வீடுகள் கட்டித்தர வேண்டும். மேலும், ரேசன் கார்டு, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் ஆகியவை இல்லாததால் பழங்குடியினர் நலத்திட்டத்தில் சலுகைகள் பெற முடிவதில்லை.

எனவே, பூம் பூம் பழங்குடி மக்களுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் இருந்து கழிவறை வசதி கொண்ட வீடுகள் மற்றும் ரேசன் கார்டு, ஆதார் கார்டு, சாதிச்சான்றிதழ் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி இந்திய மக்கள் சட்டக் கழக தலைவர் சி.பிரேம்நாத் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் திங்களன்று மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: