பனாமா விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் பணம் குவித்துள்ள உலக பிரபலங்களின் பட்டியலை அண்மையில் பனாமா நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று இணையதளத்தில் வெளியிட்டது.பனாமா பேப்பர்ஸ் என்ற தலைப்பில் வெளியான இந்த விவகாரம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அவரது பதவியும் பறிக்கப்பட்டது. இந்த பட்டியலில் இந்தியாவில் பல அரசியல் தொடர்புடையவர்கள், சினிமா நட்சத்திரங்கள், பெரும் பணக்காரர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. இதில் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரும் உள்ளது. இந்த விவகாரம் குறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்க உத்தரவிட முடியாது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Leave A Reply

%d bloggers like this: