பாஜக, ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எதிராக நடத்தி வரும்அவதூறு பிரச்சாரத்துக்கு எதிராக வும், பாஜக தலைமையிலான மாநிலஅரசுகள் நடத்தி வரும் வகுப்புவாத நடவடிக்கைகளைக் கண்டித்தும் புதுதில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தை நோக்கி திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தலைமையில் பேரணி நடைபெற்றது. சிபிஎம் தில்லி மாநிலக்குழு இந்தபேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. தலைவர்களும், ஊழியர்களும் பேரணியாக சென்றபோது பாஜக அலுவலகத்தின் முன்பு 50 மீட்டர் தூரத்தில் காவல்துறையினர் தடுப்பரண் அமைத்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கு நடந்த ஆர்ப்பாட்ட த்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தாகாரத், பிரகாஷ் காரத் உள்ளிட்டோர் பேசினர். மத்தியக்குழு உறுப்பினர்கள், தில்லி மாநிலக்குழு நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: