ஹிஸ்ஸார், அக். 8 –
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 34-ஆவது மாநாடு, ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸாரில் நடைபெற்றது. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவராக டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச்செயலாளராக ஹன்னன் முல்லா, பொருளாளராக கிருஷ்ண பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து சங்கத்தின் துணைத்தலைவர்களாக கே. வரதராசன், கே. பாலகிருஷ்ணன், மத்திய செயற்குழு உறுப்பினர்களாக பெ. சண்முகம், டி. ரவீந்திரன், மத்திய கவுன்சில் உறுப்பினர்களாக கே. முகம்மது அலி, வி. சுப்பிரமணி, ஜி. சுந்தரமூர்த்தி, அ. விஜயமுருகன், கே.பி. பெருமாள், சச்சிதானந்தம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: