இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவீதமாகச் சரிவடைந்துவிட்டது என்பதுசாதாரணமான புள்ளிவிவரமல்ல. இந்தச் சரிவின் பின்னணியில் மோடி அரசின் பண மதிப்பு நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இருக்கின்றன என்பதும் சாதாரண விமர்சனமல்ல. இந்தியாவில் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்கள் அதை விலக்கிக்கொள்ளத் தொடங்கிவிட்டன என்கிற அளவுக்கு உண்மைகள் வெளிவரத் தொடங்கியதும், பாஜக தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் பிரதமர் இது பற்றிப் பேசவிருப்பதாகச் செய்தி வந்தது. மக்களோடு அவர் எப்போது பேசுவார் என்ற கேள்வி அப்போதே எழுந்தது.

புதுதில்லியில் தற்போது நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில், இந்தியாவில் வேலையின்மை பிரச்சனை அதிகரித்து வருவது பற்றிய கவலை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் 200 பெரிய நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளில் கணிசமான அளவுக்கு வேலைவாய்ப்புகள் சுருங்கிவிட்டன. அடிக்கடி உற்பத்தி நிறுத்தம்அறிவிக்கப்படுகின்றது என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அந்த 200 நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்காவிட்டால் நாட்டின்தொழில்துறை மிகக்கடுமையான நிலைமையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ‘கடந்த பத்தாண்டு காலம் வர்த்தக சமூகத்திற்கு நல்ல காலமாக அமையவில்லை. செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு விரிவடைந்துவிட்டது. செல்வ விநியோகம் சமுதாயத்தின் அனைத்து மட்டங்களையும் சென்றடையவில்லை.

இது அரசியல்அமைப்புக்கே பெரும் அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது’ என்று இந்தியப் பெருநிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் குழுமத்தின் தலைவர் சுனில் மிட்டல் மாநாட்டில் கூறியிருக்கிறார். மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைவர் அஜய் பாங்கா, இந்தியா தீர்வு காண வேண்டியதனியொரு முக்கியப் பிரச்சனை வேலையின்மைதான் என்று குறிப்பிட்டிருக்கிறார்.இப்படி தொழில்துறையில் முன்னணியில் உள்ளவர்களே கூறிடும்போது, மோடி அரசின்எதிர்வினை என்ன? இதே மாநாட்டில் பங்கேற்றரயில்வே அமைச்சர் பியுஸ் கோயல், இந்தப்பிரச்சனையை அரசு பரிசீலிக்கும் என்பதாகவெல்லாம் சொல்லாமல், வேலைவாய்ப்பு உருவாகாதது நல்லதுதான் என்ற தொனியில் பேசியிருக்கிறார். இந்திய இளைஞர்கள் வேலை தேடுகிறவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக, சொந்தமாகத் தொழில் நடத்துகிறவர்களாக இருக்க விரும்புகிறார்கள் என்று வார்த்தைஜாலம் காட்டியிருக்கிறார்.

பொதுவான வேலைவாய்ப்புகளும் அதன் அடிப்படையிலான நுகர்வுச் சந்தையும் விரிவடையாதபோது அந்தஇளைஞர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கிதங்கள் உற்பத்திப் பொருள்களை யாரிடம்கொண்டுபோய் விற்பார்கள்? இந்த நிலையில்தான் பிரதமர் மோடி நிதியமைச்சரோடும் பாஜக தலைவர் அமித் ஷாவுடனும் நீண்டநேரம் கலந்தாலோசித்ததாக செய்தி வந்திருக்கிறது. அப்போது என்ன விவாதித்திருப்பார்கள்? பண மதிப்பு நீக்கம், கொடூரமான மறைமுக வரியானஜிஎஸ்டி போன்றவற்றின் எதிர்மறை விளைவுகளிலிருந்து மக்களை எப்படி மீட்பது என்றா அல்லது இதனால் எழக்கூடிய மக்களின் ஆவேசத்தை எப்படித் திசை திருப்புவது என்றா?

Leave A Reply

%d bloggers like this: