தரங்கம்பாடி, அக்.7-
நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே பொறியியல் துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துவரும் உயர் அதிகாரி மணிவண்ணனை கைது செய்யக்கோரி புதனன்று மயிலாடுதுறை ரயில்வே நிலையம் முன்பு சிஐடியு, டிஆர்இயு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் இடதுசாரி அமைப்புகள் சார்பில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் நாகை மாலி தலைமை வகித்தார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாநில கன்வீனர் மகாலெட்சுமி, டிஆர்இயு செயல்தலைவர் ஏ.ஜானகிராமன், இஞ்சினியரிங் சேர்மன் சாம்பசிவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.மாரிமுத்து, சிஐடியு மாவட்டச் செயலாளர் சீனி.மணி உள்ளிட் டோர் உரையாற்றினர். தொழிற் சங்கத்தினர், மாதர், விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறை ரயில்வே இஞ்சினியரிங் பிரிவில் கேராளவை சேர்ந்த பெண்கள் அதிகமாக பணியாற்றுகின்றனர். இவர்களிடம் உயர் அதிகாரியான மணிவண்ணன் தொடர்ந்து பாலியல் ரீதியாக பல்வேறு தொந்தரவுகளை செய்துவந்துள் ளார். அதுமட்டுமில்லாமல் பெண் ஊழியர்களிடம் ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெறுவதோடு போனஸ் தொகையிலும் பெரும் பகுதியை தொடாந்து மிரட்டி பெற்று வந்துள் ளார். பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளித்தும் பெயரளவிற்கு விசாரணையை விசாரணைக்குழு நடத்திவிட்டு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2013 இல் மயிலாடுதுறை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சிதம்பரம், கிள்ளை பகுதியில் 1991 இல் மூடப்பட்ட ஆளில்லா ரயில்வே கேட்டுகளை அங்குள்ள இறால் பண்ணைகளுக்கு ஆதரவாக பல லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் அதேஇடங்களில் ரயில்வே கேட்டுகளை திறந்தார். அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு திருவனந்தபுரத்திற்கு மாற்றலாகி மீண்டும் மயிலாடுதுறைக்கு பணியாற்ற வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.