சேலம், அக். 6-
சேலம் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பல பகுதிகளில் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அலட்சியமாக இருந்து வருகிறது.  குறிப்பாக சேலம் மாநகராட்சி 58வது டிவிசன் கருங்கல் வாடி , சின்ன பிள்ளை, குட்டை காடு ஜவகர் தெருவில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதுகுறித்து பல முறை மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைமையில்குப்பை அள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார சீர்கேடு ஏற்படமால் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாநகர கிழக்கு குழு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கத்தின் செயலாளர் செயலாளர் பெரியசாமி, தலைவர் வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.