கொழும்பு,

 தூத்துக்குடி – கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 1914-ம் ஆண்டு தனுஷ்கோடிக்கும் இலங்கை தலைமன்னாருக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1964-ம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி முற்றிலும் பாதிக்கப்பட்டதால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவையை தொடங்குவதற்கான ஆவணங்களை இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த ஆவணத்தில், தூத்துக்குடி – கொழும்பு கப்பல் சேவையை தொடங்குவதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் இடையே கலாச்சார, பொருளாதார தொடர்புகள் மேம்படும். இரு நாடுகளின் சுற்றுலா, வர்த்தகம், புதிய தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், ராமேஸ்வரம் – கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில், தூத்துக்குடி – கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இரு நாட்டு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் விரைவில் தூத்துக்குடி – கொழும்பு பயணிகள் கப்பல் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: