கவுகாத்தி.

அருணாச்சல் பிரதேசத்தில் இந்திய  விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் பலியாகினோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

அருணாச்சல் பிரதேச மாநிலம் தவாங் மாவட்டத்தில் இன்று காலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான MI-17 V5 ஹெலிகாப்டரில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக விழுந்து நொறுங்கியதில் 2 அதிகாரிகள் உட்பட 5 பேர் பலியாகினர் என முதலில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்ற இரு வீரர்களும் உயிரிழந்தனர் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: