ஆஸ்லோ,

2017 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, அணு ஆயுத எதிர்ப்பு நிறுவனமான ’ஐகேன்’ அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. அப்போது அணு ஆயுத எதிர்ப்பு நிறுவனமான ’ஐகேன்’ அமைப்புக்கு இந்தாண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக  நோபல் பரிசு கமிட்டியின் தலைவர் ரீய்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார்.

மேலும் அவர் மனிதர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுத பயன்பாட்டை தடுக்கவும், அணு ஆயுதங்கள் பரவுவதை தடுக்க பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்த உறுதுணையாக இருந்ததற்காகவும் ’ஐகேன்’ அமைப்புக்கு இந்த பரிசு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: