சிவகங்கை,
தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளதாக கதிரேஷன் மீனாட்சி புகார் அளித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக்கூறி வழக்கு தொடர்ந்தனர். மதுரை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணையின் போது தனுஷ் தரப்பில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கதிரேசன் புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

மனுவில் தாக்கல் செய்துள்ளபடி சென்னை எழும்பூர் மருத்துவமனையில் கஸ்தூரி ராஜாவுக்கு குழந்தை பிறந்ததற்கான ஆவணங்கள் இல்லை என்பது கதிரேசனின் புகார். பிறப்பு சான்றிதழ், சாதி மற்றும் பெயர் சான்றிதழ்கள் ஆகியவை போலியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கதிரேசன் புகார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply