கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் பெய்த கனமழையால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரியில் கடந்த சிலதினங்களாக மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி அருகே உள்ள தண்டேகுப்பத்தில், நேற்றிரவு கனமழை பெய்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ராதா (65), இவரது மகள் புஷ்பா (35), பேரன்கள் வசந்த குமார் (15), பகவதி (13), பேத்தி முல்லை (8) ஆகியோர் குடிசையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது, குடிசை வீட்டின் அருகில் இருந்த ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து, குடிசைவீட்டின் மீது விழுந்தது. இதில், குடிசைவீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராதா, இவரது மகள் புஷ்பா மற்றும் பேரன்கள் வசந்தகுமார், பகவதி, முல்லை ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற வருவாய் கோட்டாட்சியர் அருண், வட்டாட்சியர் கண்ணியப்பன் ஆகியோர், ஆய்வு மேற்கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: