ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தங்களை மண்ணில் புதைத்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் விவசாயிகள் மாபெரும் போராட்டம் நடத்தினர். இதேபோல் தமிழக விவசாயிகள் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ராஜஸ்தானில் வீடு கட்டும் திட்டத்திற்கு விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் பாஜக அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜெய்ப்பூர் நகருக்கு அருகே உள்ள நீந்தர் என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் புதனன்று குழி தோண்டி அதில் பாதி அளவு தங்களை புதைத்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1350 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதில் பெரும்பாலும் விவசாய நிலங்கள் எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply