காரைக்குடி ;
சீனாவில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஸ் போட்டியில் காரைக்குடி மாணவர்  தங்கப்பதக்கம் வென்றார்.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள ஷில்லாங் நகரில் செப்டம்பர் 27 முதல் 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கிடையேயான செஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் 14 நாடுகளைச் சேர்ந்த அணியினர் கலந்து கொண்டனர்.
அதில் 12 வயதுக்குள்பட்ட குழுப் போட்டியில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்றனர். அந்தப் பிரிவில், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவர் எம். பிரனேஷூம் இடம் பெற்றிருந்தார். இவர் போட்டியில் அபாரமாக விளையாடி 7-க்கு 7 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
 

Leave a Reply

You must be logged in to post a comment.