காலம் காலமாக பல்வேறு காய்ச்சல்களும், தொற்று வியாதிகளும் மனித இனத்தின் மேல் வந்த வண்ணம் உள்ளது. இதற்கு பல எளிய மூலிகை மருந்துகளை கொண்டு காய்ச்சல் வராமலும் அப்படியே வந்தாலும் வந்த பின்னும் குணப்படுத்தும் ஆற்றல் சித்த மருத்துவத்திற்கு உள்ளது. இன்றுவரையில் வந்த காய்ச்சல்களும், இனி வரப்போகும் காய்ச்சல்களும் மொத்தம் 64 மட்டுமே. அதற்குரிய தடுப்பு மருந்துகளும் வந்த பின் குணமாக்கும் மூலிகைகளும் சித்த மருத்துவத்தில் ஏராளம் உள்ளன. பழைய மொந்தையில் புதிய கள் என்பதற்கு ஏற்ப, தற்போது அறிவியலார் காய்ச்சல்களை பறவை காய்ச்சல், எலிக்காய்ச்ல், பன்றி காய்ச்சல், கோழிகாய்ச்சல் என வேறு வேறு பெயர்களை சூட்டி வருகின்றனர்.
தற்போது டெங்கு காய்ச்சல் தாக்கல் அதிகம் உள்ளது. தமிழ்நாட்டில் சிகிச்சை பலனின்றி பலர் இறந்துள்ளனர். ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் பல ஆயிரங்களை செலவழித்து குணப்படுத்தும் நிலைமை உள்ளது. ஏழை மக்கள் அரசு மருத்துவமனையினை நம்பி சிகிச்சை எடுத்து வருகின்றனர். அரசு தரப்பில் வீடு வீடாக கொசு ஒழிப்புப் பணிகளில் சுகாதாரப் பணியாளர்களை ஈடுபடுத்தி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆயினும் டெங்கு காய்ச்சலின் தாக்கத்திற்கு மக்கள் ஆட்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் ஒரு வகை கொசுவினால் வருகிறது என்றும் பகலில் காலில் மட்டுமே கடிக்கும் என்றும்கூறியுள்ளனர்.
பாரம்பரிய சித்த மருத்துவத்தில் காய்ச்சலை மிக எளிய வழியில் குணப்படுத்த முடியும். விளக்கெண்ணெய் ( ஆமணக்கு) ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி. அதேபோல் நல்லெண்ணெயும் ஒரு கிருமி நாசினியாகும். இதனை உணவில் பயன்படுத்தும் போதும் மேல் பூச்சாக இரவு உடலில் தேய்த்து காலையில் குளிக்கும் போதும் எவ்வித கொசுவும், ஈ அல்லது விஷ பூச்சிகளும் கடிக்கத் தயங்கும், கடித்தாலும் அதன் விஷம் உடலில் ஏறாது. வேப்ப எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
டெங்கு காய்ச்சல் என்பது நோய் எதிர்ப்பு சக்திகளை குன்றச் செய்து இரத்த சிவப்பு அணுக்களை அழிக்கும் கனைச்சூடு ( ஜூரம்) ஆகும். டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குன்றி இரத்த அணுக்கள் குறைந்து மரணம் வரைக் கூட போகலாம். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக பப்பாளி இலை ஜூஸ் அல்லது பழம், காய் போன்றவற்றை முறைப்படி பயன்படுத்தினால். உடனே நோய்த் தாக்கம் குறையும். மிளகரனை என்ற ஒரு செடி உண்டு. இதன் இலைகளை 10 எடுத்து மென்று சாப்பிட எந்த வித காய்ச்சலும் ஒரிரு நிமிடங்களில் குறையும். இதனை அரசு பயிர் செய்து கேப்சூல்காளக மாற்றி தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தலாம். மேலும் இது குடல்வாயு. மூட்டுவலி. அரிப்பு. சளி. நீர்பீனிசம் போன்ற பல வியாதிகளையும் குணமாக்கும். இதன் இலைகளில் முட்கள் இருக்கும். வாயில் போட்டு மென்றடன் முட்கள் கரைந்து விடும். அதிக உடல் பருமனையும் குறைக்கும் ஆற்றல் வாயந்தது.
நமது சித்த மருத்துவத்தின் சிறப்பே பக்க விளைவுகளின்றி ஒரே மூலிகை பல வியாதிகளை குணமாக்குவதும் ஒரு வியாதிக்கு பல நூறு மருந்துகள் உள்ளதும் தான். உதாரணமாக காமாலை என்ற நோய்க்கு இதர மருத்துவத்தில் மருந்துகள் அரிது. ஆனால் நமது பாராம்பரிய மருத்துவத்தில பல நூறு மருந்துகள் உள்ளன.
எல்லாவித காய்ச்சலுக்கும் துடுப்பு மருந்தாக பயன்படுத்தக் கூடிய மூலிகைகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் துளசி, திருநீர்பத்திரி, மாசிபத்திரி, அதிமதுரம், பற்படாகம், மிளகரனை, விஷ்ணுகிராந்தி, வில்வம், சிவகரந்தை ஆகியனவற்றில் தலா 100 கிராமம் வீதமும் அதிமரம் மட்டும் 10 கிராம் எடுத்து ஒரு செம்பு பாத்திரத்தில் காய்ச்சி வடித்து 1 அவுன்ஸ் ( 25 எம்எல்) வீதம் குடிக்க எவ்வித காய்ச்சலும் குணமாகும். மேலும் அம்மை. காலரா போன்ற வைரஸ் பற்றிய பிணிகளும் அண்டாது என்பது உறுதி. அப்படியே வந்தாலும் விரைவில் குணமடைந்து விடும்.

Leave a Reply

You must be logged in to post a comment.