சென்னை,
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஓய்வுபெற்றார். இதையடுத்து தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர்ராவ் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, தமிழக அரசியலில் பல அதிரடி பரபரப்பு ஏற்பட்டதோடு, ஆளும் கட்சியான அ.தி.மு.க-வில் அதிகாரப்போட்டி நிலவியது. முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா, அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமனம், முதல்வராக சசிகலா பதவியேற்க முயன்ற தருணம், பின்னர் சசிகலா சிறை சென்றது, முதல்வராக பழனிசாமி பதவியேற்றது, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஆளுங்கட்சியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் திரும்பப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தமிழக அரசியல் பரபரப்புடன் காணப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், ஓராண்டுகளுக்குப் பிறகு தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா ஆளுநராக இருந்த இவர், தற்போது தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் 3 முறை நாக்பூர் தொகுதியின் மக்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது மேகாலயாவின் பொறுப்பு ஆளுநராக பணியாற்றி வருகிறார்.
பன்வாரிலால் அசாம் மாநில ஆளுநராக ஆளுநராக ஏற்கனவே பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பன்வாரிலால் புரோஹித்,   காந்தியின் குரு கோகலேவால் தொடங்கப்பட்ட ஹிதவதா ( Hitavada) என்ற அந்த ஆங்கில நாளிதழின் உரிமையாளர் ஆவார்.  பலகட்சிகள் தாவியவர். ஃபார்வேர்ட் பிளாக், கங்கிரஸ், பாஜக, அங்கு பிரமோத் மஹாஜனுடன் முரண்பாடு ஏற்பட்டதால் மறுபடிய்ம் காங்கிரஸ், மறுபடியும் பாஜக என தஞ்சமடைந்தவர் ஆவார். ஒரு தனியார் பொறியியல் கல்லூரி உரிமையாளராகவும் இருந்து வருகிறார்.
ஆர்எஸ்எஸ் தலைமையகம் இருக்கும் தொகுதியில் ஏற்கனவே மூன்று முறை எம்பியாக பணியாற்றியிருப்பவர் என்ற அடிப்படையிலும், ஆர்எஸ்எஸ் திட்டங்களை அச்சுபிறலாமல்  அமல்படுத்தக்கூடியவர் என்ற அடிப்படியிலேயே தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a Reply

You must be logged in to post a comment.