இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் விவசாயிகள் இயக்கத்தின் மகத்தான தலைவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய ஈடு இணையற்ற போராளியுமான தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 30 சனிக்கிழமையன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஊர்தோறும்சமத்துவ மயானத்தை அரசே அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னணியின் மாவட்டச் செயலாளர் நாகை மாலி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி.சிம்சன், மாவட்டப் பொருளாளர் எம்.ஏ.செங்குட்டுவன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் ஆகியோர் உரையாற்றினர்.முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பேசியதாவது: சாதிக்கொரு சுடுகாடு இருக்கிறது. இதில் பக்கத்தில் தலித்துகள் சுடுகாடுஇருந்தால், சாதி ஆதிக்கச் சக்தியினருக்கு பொறுக்காது. பல கிராமங்களில் தலித்துகளின் சுடுகாட்டுக்குப் பாதை கிடையாது. மயானம் வேண்டும்; மயானத்திற்குப் பாதை வேண்டும் என்று தமிழகத்தில் தலித் மக்கள் போராடும் நிலை இன்னும் இருந்து வருகிறது. அரசும் ஊராட்சிகளும் இதுபற்றி சிந்தித்ததுஉண்டா? சமத்துவ மயானம் அமைக்க வேண்டும்.
கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் இடதுசாரி அரசுகள் இதனைச் செய்துள்ளன. தமிழகத்தில் தலித் பட்டதாரிகள் 4.7. சதவீதம், திரிபுராவில் பொதுவாகப்பட்டதாரிகள் 95 சதவீதம். ஆனால், தலித்பட்டதாரிகள் மட்டும் 96 சதவீதம். தமிழகத்தில் தலித்துகளின் மோசமான நிலையை எண்ணிப் பாருங்கள்.தலித்துகள் பிரச்சனையில் தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இங்குள்ள எஸ்.பி.யைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்தால், “என்ன மிரட்டுகிறீர்களா?” என்று கேட்கிறார். சமத்துவ மயானம் ஏற்படுத்த வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தவிருக்கிறோம். இன்னும் ஓராண்டுக் குள், இதற்காகவே ஒரு பெரிய மாநாடு நடத்தவிருக்கிறோம். தமிழகத்தில் சாதிகள் ஒழிய வேண்டுமானால், ஊர்களில் இருக்கும் சாதிக்கு ஒரு சுடுகாடுஒழிந்து சமத்துவ சுடுகாடுகள் அமைய வேண்டும். இதனை அரசே செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.