அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கையில் கட்டணக் கொள்ளையை தடுக்குமாறு தமிழக அரசைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.சென்னையில் வியாழனன்று கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு, இதுதொடர்பாக நிறைவேற்றி யுள்ள தீர்மானம் வருமாறு:அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் நிர்ணயிக்க வேண்டும், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 29 முதல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் சிதம்பரம் ராஜா அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாண வர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.2013 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி, அதன் மூலம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழகஅரசே ஏற்று நடத்தி வருகிறது.
இருந்தாலும் கூட பிற அரசு மருத்துவக்கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணங்களை விட கூடுதலான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அதாவது, தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் – எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ 13,600ம், பல் மருத்துவப் படிப்பிற்கு ரூ 11,600ம் – முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கு ரூ.31,325ம், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு ரூ 42,025ம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு ஏற்று நடத்தும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு ரூ. 5 லட்சத்து 54 ஆயிரமும், பி.டி.எஸ்.மாணவர்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரமும், முதுநிலை டிப்ளமோ படிப்புக்கு ரூ.8 லட்ச மும், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு ரூ. 9.8 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ரூ. 200 கோடிக்கும்மேல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு மானியம் வழங்குகிறது. மானியம்வழங்கிய பிறகும் இப்பல்கலைக் கழக நிர்வாகம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடத்தும் கட்டணக் கொள்ளையை நிறுத்த மறுக்கிறது.இந்தக் கட்டணக் கொள்ளை சமூக நீதிக்கும்,ஏழை எளிய ,நடுத்தர வர்க்க குடும்ப மாண வர்களின் நலன்களுக்கும் எதிரானது. எனவே அரசு மருத்துவக் கல்லூரி களில் வசூலிக்கப்படுகின்ற கட்டணத்தை இக்கல்லூ ரியிலும் வசூலிக்க வேண்டுமென்றும்; இம்மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டுவரவேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.