மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தைத் தொடர்ந்துபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வியாழக் கிழமையன்று திறக்க இருந்த அரசுமதுபானக் கடை திறக்கப்படா மலேயே காலி செய்யப்பட்டது.கறம்பக்குடி அருகே ஒடப்பவிடுதி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னான்கோன்விடுதி சமத்துவ புரம் அருகில் கடந்த ஆறு மாதத் திற்கு முன்பாக அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டது. அப்போது தங்கள் ஊருக்கு அரசு மதுபானக் கடை வேண்டாம் என பெண்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய எழுச்சிமிக்க போராட்டத்தைத் தொடர்ந்து கடையைத் திறக்கா மல் அதிகாரிகள் சென்றுவிட்டனர

இந்நிலையில், மீண்டும் அதேஇடத்தில் கடையைத் திறப்பதற்குடாஸ்மாக் நிர்வாகம் தொடர்ச்சி யான முயற்சிகளை மேற்கொண் டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி வியாழக்கிழமையன்று கடையைத் திறப்பதற்கான அதிகாரி கள் அனைத்துவிதமான முயற்சி களையும் மேற்கொண்டனர். இதனால் கோபமடைந்த ஊர்ப் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தலைமையில் போராட் டம் நடத்தினர்.கடையைத் திறக்கக்கூடாது என்பது மட்டுமல்லாமல் கடைக்கு உள்ளே அடுக்கி வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்கள் மற்றும் தளவாடப் பொருட்களை அகற்றும்வரை இங்கிருந்து அகலமாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடு பட்டனர்.

மேலும், அருகில் உள்ளசுடுகாட்டில் சமைத்து சாப்பிட்டுஇங்கேயே உறங்கப் போவதாகத்தெரிவித்து நூதனப் போராட்டத் தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கலால் ஏடிஎஸ்பி இளங்கோவன், கறம்பக்குடி வட்டாட்சியர் சக்தி வேல், காவல் துணை ஆய்வாளர் இராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.துரைச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், ஒன்றியக்குழு உறுப்பினர் வீரராகவன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் இளமாறன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் பெரிய தம்பி, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பேச்சுவார்த்தையில், பொது க்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதால் இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்றும் மதுபாட்டில்கள் மற்றும் தளவாடச் சாமான்கள்உடனடியாக அப்புறப்படுத்தப் படும் எனவும் அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது. அதன்படி பொருட்களும் அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெற்றியைக் கொண்டாடி கலைந்துசென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: