நாமக்கல், செப்.28-
சென்னை அயனாவரத்தில் செயல்பட்டு வரும் நிர்மல் உயர்நிலை பள்ளிக்கு சிஐடியு நாமக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் கணினிகள் வழங்கப்பட்டன. நாமக்கல்லில் சிஜடியு சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் கே.கே.நினைவுரங்கத்தில் வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிஜடியு மாவட்டத் தலைவர் பி.சிங்காரம் தலைமை வகித்தார். இதில் சிஐடியு சார்பில் செயல்பட்டு வரும் சென்னை அயன்புரம் உயர் நிலைப்பள்ளிக்கு, சிஜடியு நாமக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் இரண்டு கணினிகள் வழங்கப்பட்டது. இதனை சிஜடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிஜடியு மாநில உதவி தலைவர் எஸ்.சுப்ரமணி, மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, மாவட்ட பொருளாளர் எ.கே.சந்திரசேகரன், மாவட்ட துணை தலைவர் எம்.அசோகன், மாவட்ட உதவி செயலாளர் கு.சிவராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: