கோவை, செப்.28-
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கோவை மாவட்டம், சிறுமுகை அருகே ஜடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமராஜன் (22). இவரது வீட்டின் அருகே வசித்து வந்த 14 வயது பள்ளி மாணவியை, கடந்த 2016 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராமராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி (பொறுப்பு) குற்றம்சாட்டப்பட்ட ராமராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: