ஈரோடு, செப். 28-
பவானி ஆப்பக்கூடல் பகுதியில் செயல்படும் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாக கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், பவானி ஆப்பக்கூடல் பகுதியில் செயல்படும் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் முற்றிலும் மாசு அடைந்து, குடிப்பதற்கு உபயோகமற்றதாக மாறியுள்ளது. எனவே, இத்தகைய ஆலை கழிவுகளை நேரடியாக நிலத்தில் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்தி, பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை வேண்டும். மேலும், பேரூராட்சி நிர்வாகம் உயர்த்தியுள்ள குடிநீர் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். பவானி நதிக்கரையில் உள்ள மயான ஆக்கிரமிப்புகளை அகற்றி தகன மேடை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்ம் நடைபெற்றது.

ஆப்பக்கூடல் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆப்பக்கூடல் கிளை செயலாளர் சின்னத்துரை தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி, சி.பரமசிவம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் புதுப்பாளையம் கிளை செயலாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.