புவனேஸ்வர்,

ஒரிசாவில் இன்று காலை சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரிசா மாநிலம் நேர்கண்டி ரயில் நிலையத்தில் இன்று காலை சரக்கு ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் 16 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புக்குழுவினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தடம்புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: