ராய்பூர்; 
இந்தியாவின் குர்கானை(அரியானா) தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் விமான நிறுவனம் இண்டிகோ.இது இந்திய விமான நிறுவனங்களில் மிகப்பெரியது.
இன்று காலை 9.50 மணிக்கு சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் இருந்து கொல்கத்தாவுக்கு 150 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.கிளம்பிய சிறிது நேரத்தில் பறவை மோதியதையடுத்து மீண்டும் ராய்பூர் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
விமானத்திற்கும் பயணிகளுக்கும் சேதம் எதுவும் இல்லை என்றும் பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.பயணிகள்  மாற்று விமானம் மூலம் கொல்கத்தா அனுப்பி வைக்கப்பட்டனர்.
பறவைகளுக்கு பிடித்த விமானமாக இண்டிகோ உள்ளது.கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி, ராய்பூரில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ விமானம் பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

You must be logged in to post a comment.