கோவை, செப்.26-
4 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை பெரிய கோவிலில் காணாமல் போன பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. 6 மாத குழந்தையாக இருந்தபோது தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே பெண் ஒருவரால் கடத்தப்பட்டு கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யாழினி (தற்போது 5 வயது) என்ற சிறுமியை கேரளமாநில காவல்துறையினர் மீட்டுள்ளனர். தற்போது, இச்சிறுமி கேரள மாநிலம் மழப்புரம் மாவட்டம், வாண்டூர் குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். எனவே குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்கள் உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் காப்பக அலுவலரை 30 நாட்களுக்குள் தொடர்பு கொண்டு குழந்தையை மீட்டுச் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: