கோவை, செப்.26-
கோவையில் உள்ள குளங்களில் வண்டல் மண் எடுப்பதன் பேரில் சிலர் விதிமுறைகளை மீறி ஆழமாக தோண்டுவதால் நுண்ணுயிர்கள் உயிரிழப்பதாக கூறி விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழக அரசு குளங்களில் உள்ள வண்டல் மண்ணை அல்ல விவசாயிகளுக்கு அனுமதி அளித்து உள்ளது. இந்நிலையில், சிலர் கனரக வாகனங்களை கொண்டு வந்து ஆழமாக தோண்டி மண் அள்ளி வருகின்றனர். இதனால் காலகாலமாக பூமிக்கடியில் வாழ்ந்து வந்த நத்தை, மண்புழு, நண்டு, தவளை நீரில் வாழும் உயிர் உள்ள ஜீவன்கள் மேலும் பலவகையான நுண்ணுயிர்கள் பாதிக்கப்படுகிறது. எனவே விதிமுறைகளை மீறி வண்டல் மண் எடுப்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள், தவளை, மண் புழு, நண்டு உள்ளிட்ட உயிரினங்களைக் கொண்டு வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: