உடுமலை, செப்.26-
ரேசன் கடைகளை மூடும் திட்டத்தை ஆளும் அரசுகள் கைவிட வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்க உடுமலை தாலுகா மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் உடுமலை தாலுகா மாநாடு சங்க தலைவர் மாசாணி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதரமாக விளக்கும் ரேசன் கடைகளை மூடும் திட்டத்தை ஆளும் அரசுகள் கைவிட வேண்டும். வீட்டுமனை கேட்டு விண்ணப்பம் செய்த அனைவருக்கும் இலவச பட்டா வழங்க வேண்டும். பல மாதகாலமாக நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் ஒய்வூதியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். நூறு நாட்கள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆகவும், நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.400 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மனங்கள் நிறைவேற்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டனர். இதில் தாலுகா தலைவராக ஆர்.மாசாணி, செயலாளராக எம்.ரங்கராஜ், பொருளாளராக முத்துசாமி, துணைத்தலைவராக வெங்கடாசலம், துணைச் செயலாளராக என்.சுப்புலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், மாவட்ட செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் நிறைவுரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.