ஈரோடு, செப்.26-
பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்தோர் உச்சநீதிமன்ற உத்தரவுபடி தங்களது பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பி.ஏ.சி.எல்.எனப்படும் பியர்ல் அக்ரோடேக் கார்பரேஷன் லிமிடெட் நிறு
வனத்தில் நாடு முழுவதும் சுமார் 6 கோடிக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் முதலீட்டாளர்களும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்களும் உள்ளனர். இந்நிறுவனம் உறுதியளித்தபடி முதலீட்டாளர்களுக்கு முதிர்வு தொகையை வழங்கவில்லை. இதையடுத்து, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி லோதா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துகள், முதலீடு, வங்கி இருப்பு போன்றவைகளை 6 மாதங்களுக்குள் கணக்கிட்டு, அதனை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பவழங்க வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால், இதுவரை அவை அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி 12.5 சதவீத வட்டியுடன் முதலீட்டு பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும். அந்நிறுவனத்தில் பணி செய்த முகவர்கள், ஊழியர்கள், களப்பணியாளர்கள் வேலை இழந்துள்ளதுடன், மிரட்டலுக்கும் ஆளாகி வருவதால் அவர்களை காக்கவும், மாற்றுப்பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று பாதிக்கப்பட்ட முதலிட்டாளர்கள் பிஏசிஎல் களப்பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சங்க (சிஐடியு) தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் ஆட்சியர் பிரபாகரனை சந்தித்து மனு அளித்து முறையிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: