சண்டிகர்,

பாலியல் சாமியார் குர்மீத் ராம் ரஹிமின் மகள் ஹனிப்ரித் மற்றும் ஆதித்யா இன்சேன்-க்கு அரியானா காவல்துறை பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

பாலியல் சாமியார் குர்மீத் ராம் ரஹிமிற்கு பக்கபலமாக இருந்து வருபவர் அவரது வளர்ப்பு மகள் என்று கூறப்படும் ஹனிப்ரித். தேரா சச்சா சவுதாவின் தலைமை ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண்களை பாலியல் பலத்காரம் செய்த குற்றத்திற்காக குர்மீத் ராம் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து ஹனிப்ரித் தலைமறைவானார். இதையடுத்து தேரா சச்சா ஆசிரமத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஹனிப்ரித் மற்றும் ஆதித்யா இன்சேனை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அரியானா மாநில காவல்துறை பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: