லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் ஒரே தண்டவாளத்தில் வந்த 3 ரயில்களால் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் ஓட்டுநர்களின் சமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் அருகே  துரன்தோ எக்ஸ்பிரஸ், ஹடியா-ஆனந்த் விஹார் மற்றும் மஹாபோதி எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. இதனை அறிந்த ரயில் ஓட்டுனர்கள் சாமர்த்தியமாக விரைந்து  ரயிலை நிறுத்தினர். பின்னர் இது குறித்து உடனடியாக ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓட்டுனர்களின் சாமர்த்தியத்தால் மிகப்பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: