சென்னை;
தேவைப்பட்டால் பாஜக-வுடனும் கைகோக்க தயாராக உள்ளேன் என்று நடிகர் கமல்ஹாசன் குழப்பியுள்ளார்.

கமல்ஹாசன் சில மாதங்களாக அரசியலில் ஈடுபட போவதாக கூறி வருகிறார். இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டியில், “அரசியலில் தீண்டாமை என்பதே இல்லை; நிர்வாக ரீதியாக தமிழகத்துக்கு தேவைப்பட்டால் பாஜகவுடன் கைகோக்க தயாராக உள்ளேன்; பாஜக-வின் வலதுசாரி கொள்கைகள் எனக்கு அதிருப்தி அளிக்கிறது; அதேசமயம், குறைந்தபட்சம் செயல்திட்டம் உருவானால் பாஜக-வுடன் தொடர்பு வைத்து கொள்ள தயங்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

“தேர்தலில் போட்டியிட்டு சட்டரீதியான பொறுப்பை ஏற்கும் சூழல் வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவேன்; அரசியலில் ஈடுபடுவது என்ற முடிவு ஏதோ உணர்ச்சிவயப்பட்டு எடுக்கப்பட்டது அல்ல; நிதானமாக யோசித்தே எடுத்துள்ளேன்; தேர்தலில் நான் எங்கே போட்டியிடுவது என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்; என்னைப் பொறுத்தவரையில் கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதிகளைத்தான் தேர்வு செய்வேன்” என்றும் கமல் கூறியுள்ளார்.

Leave A Reply