பள்ளிப்பாளையம், செப்.25-
பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி ஞாயிறன்று வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டனர். பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். பள்ளிப்பாளையம் பேருந்து நிலைய பொதுக்கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் முறைகேடின்றி நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிறன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சைக்கிள் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

இவ்வியக்கத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் எம்.பிரபாகரன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் கே.மோகன், பிரச்சார இயக்கத்தை தொடக்கி வைத்தார். இந்த பிரசார இயக்கத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் லெனின் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முடிவில், முன்னாள் மாவட்ட பொருளாளர் எஸ்.தனபால் பிரசார இயக்கத்தை நிறைவு செய்து வைத்தார்.

Leave A Reply

%d bloggers like this: