கோவை, செப்.25-
முறைசார தொழிலாளர்களின் பணப்பயன்களை வழங்காமல் இழுத்தடிக்கும் நலவாரியத்தின் செயல்பாட்டை கண்டித்து திங்களன்று சிஐடியு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசின் நலவாரியம் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த முறைசார நலவாரியம் என்பது அரசின் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததாலும், அதிகாரிகளின் பாரபட்சம் காரணமாகவும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன்கள் தொடர்ந்து இழுத்தடிக்கப்படுகிறது.

நலவாரியத்தின் இத்தகைய போக்கை கண்டித்து திங்களன்று சிஐடியு சார்பில் மாநில தழுவிய அளவில் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. கோவை இராமநாதபுரத்தில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு கட்டிடம் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். இதில் சிஐடியு கட்டுமான சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.மனோகரன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சம்மேளன பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி, தங்க நகை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சந்திரன், ஹோட்டல் சங்க செயலாளர் ராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

நாமக்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஜடியு மாவட்ட தலைவர் பி.சிங்காரம் தலைமை வகித்தார். சாலை போக்குவரத்து சங்க தலைவர் ஏ.கே.சந்திர சேகரன், கட்டிட தொழிலாளர் சஙக மாவட்ட செயலாளர் கு.சிவராஜ், பொது தொழிலாளர் சங்க செயலாளர் ஏ.காஸிவிஸ்வநாதன், தையல் தொலிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜ.ராயப்பன், சிஜடியு மாவட்ட உதவி தலைவர் கே.சின்னுசாமி, மோட்டார் சங்க மாவட்ட துணைத் தலைவர் சு.சுரேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில், சிஜடியு மாவட்ட செயலாளர் என்.வேலுசாமி நிறைவுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

உதகை
உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜே.ஆல்தொரை தலைமை தாங்கினார். இதில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.