திஸ்பூர்,
அசாமில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் மாநிலத்தில் டின்சுகியாவில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.