பொள்ளாச்சி, செப்.24-
பொள்ளாச்சி அருகே அரசுப் பேருந்து மீது மணல் லாரி மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். கோவையிலிருந்து ஞாயிறன்று காலை அரசு பேருந்து ஒன்று சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து பொள்ளாச்சி நஞ்சேகவுண்டன் புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, அச்சாலையில் முன்னே முன்னே சென்று கொண்டிருந்த மணல் லாரி மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த கோவை மாச்சாம்பாளையத்தைச் சேர்ந்த அகிலாண்டேஷ்வரி வயது (32), தாரிகா (4), சுதாகீர்த்தி (9), வசந்த் (7) ஆகியோர் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், லேசான காயமடைந்த கோவை மாச்சாம்பாளையத்தைச் சேர்ந்த லட்சுமிதேவி (28) , பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த காளீஸ்வரி (5), சித்தாபுதூரைச் சேர்ந்த லட்சுமி (19), ஆகாஷ் (10), பீளமேடு பகுதியைச் சேர்ந்த கௌசல்யாதேவி (8), செந்தில்குமார் (33) ஆகிய 6 பேர் பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கிபாளையம் காவல் துறையினர், அரசுப் பேருந்தின் ஓட்டுநர் இளங்கோவன் (35), நடத்துநர் சிதம்பரம் மற்றும் மணல் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: