அகர்தலா, செப். 24 –
திரிபுராவில் பாஜக ஆதரவுடன் இயங்கி வரும் ஏபிஎப்டி குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் ஆறுதல் கூறினார். திரிபுராவைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர் சந்தனு பௌமிக் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏபிஎப்டி குண்டா்களால் படுகொலை செய்யப்பட்டார். அந்த அமைப்பினர் நடத்திய ஒரு தாக்குதலை படம்பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரை தாக்கி படுகொலை செய்தது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave A Reply