டேராடூன், செப். 24-
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரகண்ட் மாநிலத்தை ஒட்டி உள்ள சீன எல்லைப் பகுதிக்கு செப்.28-ஆம் தேதி முதல் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கடந்த சில மாதங் களாக இந்தியா சீனா இடையே டோக்லாம் பிரச்சனை குறித்து பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இதனையடுத்து பிரதமர் மோடி சீன பயணம் மேற்கொண்டார்.

இதனையடுத்து வரும் 28-ஆம் தேதி முதல் உத்தரகண்ட் மாநிலத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். சுற்றுப்பயணத்தின் போது அவர் ரிம்ஹிம் (12,500 அடி உயரம்), மணி (10,500 அடி) மற்றும் ஆலி (10,200 அடி) ஆகிய இடங்களுக்கு செல்ல உள்ளார். அங்கு இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.