புவனேஸ்வர்,

ஒரிசா மாநிலத்தில் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்கான போக்குவரத்து செலவிற்காக ரூ.1000 வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஒரிசா மாநிலத்தில் கர்ப்பிணி பெண்களை பிரசவத்திற்காக மருத்துவமனனைக்கு அழைத்து வரும் போது ஏற்படும் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் அவர்களை தொட்டிலில் தூக்கி வருவது, தோளில் சுமந்தபடி வருவதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பு மற்றும் பிறந்த குழந்தைகள் இறப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்கான போக்குவரத்து செலவிற்காக ரூ.1000 வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.