திருநெல்வேலி;
மனித குல வளர்ச்சிக்கு விண்வெளி அறிவியல் தொழில் நுட்பம் என்பதை முன்வைத்து உலக விண்வெளி ஆய்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ மையம் மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு மற்றும் தண்ணீர் ராக்கெட் ஏவும் போட்டிகளை அறிவித்துள்ளது.1999 ஆம் ஆண்டு ஐநா பிரகடனத்தின் படி உலக விண்வெளி ஆய்வு வாரமாக ஆண்டுதோறும் அக்டோபர் 4 முதல் 10 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. மனித குலத்திற்கு விண்வெளி அறிவியலும், தொழில்நுட்பமும் உயர்வான வாழ்க்கைதை் தரத்தை ஏற்படுத்துவது இதன் நோக்கம். முதல் செயற்கை கோள் ஸ்புட்னிக்-1 1957 அக்டோபர் 4 ஆம் தேதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.

அதுபோல் 1967 அக்டோபர் 10 ஆம் தேதி விண்வெளியை அமைதிக்கான நடவடிக்கைக்கு பயன்படுத்துவது குறித்து ஐநா பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு தின்களையும் நினைவு கூரும் வகையில் விண்வெளி வாரத்தை இந்தியா உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகள் கொண்டாடி வருகின்றன.

அதன் ஒருபகுதியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மகேந்திரகிரி உந்தும் வளாகம் சார்பில் உலக விண்வெளிவாரம் கொண்டாடப்படுகிறது. அதன்படி மாணவ மாணவியருக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகளும், தண்ணீர் ராக்கெட் ஏவும் போட்டியும் நடைபெற உள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கலாம்.

கட்டுரைப்போட்டிக்கான தலைப்பு 6 முதல் 9ஆம் வகுப்பு வரை “அண்ட வெளியில் அந்நிய உலகத்தைத் தேடி“ (in search Of an alien world). 9,10 ஆம் வகுப்புகளுக்கு ” பூமியில் வாழும் சூழலற்றுப் போனால்” (If earth becomes inhabitable, What next???) 11,12 ஆம் வகுப்புகளுக்கு “இன்னொரு கிரகத்துக்கு இன்பச் சுற்றுலா போவோமா?” (A trip to our neighboring planets) ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி அனுப்பலாம் என நிர்வாக அலுவலர் ஜி.பூபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுரை தமழ் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் வேண்டும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அப்படியே சமர்ப்பிப்பவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டாது. கட்டுரைகள் 2 ஆயிரம் வார்த்தைகளுக்க மிகாமல் ஏ4 அளவு தாளில் எழுதப்பட வேண்டும்.

இது போல் பூமியில் வேறெங்கு வாழலாம் (Life beyond earth) என்னுடைய கற்பனையில் புதிய உலகம் (The new world Of my imagination), புதிய உலகைக் கண்டுபிடிக்க என்னுடைய பயணத்திட்டம் ( My Voyage plan to explore new worlds in space) ஆகிய தலைப்புகளில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெறும்.

தண்ணீர் ராக்கெட் ஏவுதல் போட்டி திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் அக்டோபர் 10-ஆம்தேதி மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளியின் மூலமாக பங்கேற்கலாம். ஒவ்வொரு பள்ளியின் சார்பாக மூன்று மாணவர்களுக்கு மிகாமல் பங்கேற்கலாம். அக்டோபர் 5-ம் தேதிக்குள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிர்வாக அலுவலர், உந்தும வளாகம், மகேந்திரகிரி, திருநெல்வேலி என்ற முகவரியிலும், 04637-283510, 281210, 9486692236, 9442140183 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். அல்லது wsw2017@iprc.gov.in  என்ற மின்அஞ்சல் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியர் அனுமதி கடிதத்துடன் தங்கள் சொந்தப் பொறுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பாக, நிர்வாக அலுவலர் பு. பூபதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.