லக்னோ,
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தனக்கு நீதிக் கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் சாமியால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி, தனக்கு நடந்த பாலியல் தொல்லைக்கு நீதிக் கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த ஒரு வருடமாக இளைஞர் ஒருவர் தன்னைப் பின்தொடர்ந்து வருவதாகவும், அடிக்கடி பாலியல் தொல்லை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு கொலை மிரட்டல் விடுவதால், வீட்டை விட்டு வெளியே செல்லக் கூட பயமாக இருப்பதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார். எனவே எனக்கு உரிய நீதியை வழங்க வேண்டும் என பிரதமரிடம் அந்தக் கடிதத்தில் மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: