சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் மொகாலியின் மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
65 வயதான மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் மற்றும் அவரது 92 வயது தாயார் குர்சரண் கவுர் ஆகியோர் மொகாலி உள்ள அவர்களது வீட்டில் படு கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலைக்கு மேல் கொலை நடத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஷிரோமணி அகாலி தால் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல் ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார் கே.ஜே.சிங் வீட்டில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
18 நாட்களில் 3 பத்திரிகையாளர்கள் கொலை!
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து செப்., 20ஆம் தேதி திரிபுராவில் இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற மோதலின் போது செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சாந்தனு போவ்மிக் கொல்லப்பட்டார். இதனையடுத்து கடந்த 18 நாட்களில் மூன்றாவதாக இன்று கே.ஜே.சிங் கொல்லப்பட்டுள்ளார் இது நாடுமுழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

You must be logged in to post a comment.