கோவை, செப்.22-
தலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்கக்கோரி. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. கோவை மாவட்டத்தில் தலித் மக்களுக்கு சொந்தமான 4 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. போலியான ஆவணங்கள் மற்றும் மோசடியாக அந்த நிலங்களை தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்தி உள்ளன. ஆகவே, இந்த நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி வெள்ளியன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சமூக நீதிக் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அச்சமயம் முற்றுகை போராட்டம் நடைபெற்றதால் பெரும் பாரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோருடன், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: