திருப்பூர்,
திருப்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தெக்களூர் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார். காயம் அடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.