திருப்பூர், செப்.22-
மத்திய அரசின் தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக நவம்பர் 9 – 11 ஆம் தேதி வரை மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளதை விளக்கி திருப்பூரில் கருத்தரங்கம் நடைபெற்றது. திருப்பூர் கே.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு எச்எம்எஸ் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சி.பழனிசாமி, மாவட்டத் தலைவர் என்.சேகர், எல்பிஎப் செயலாளர் ஜி.பாலசுப்பிரமணியம், ரங்கசாமி, ஐஎன்டியுசி தலைவர் அ.பெருமாள், செயலாளர் சிவசாமி, எம்எல்எப் தலைவர் சம்பத், செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

குறிப்பாக, சாமானிய மக்கள் கழுத்தை நெரிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், அனைத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கவும், தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாக அமலாக்கவும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், போனஸ் சட்ட வரம்புகளை நீக்க வேண்டும், அனைத்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்தவும், அதற்கான நிதி ஒதுக்கவும், சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை சட்டமாக்கவும், பாதுகாப்பு, வங்கி மற்றும் காப்பீட்டு உள்ளிட்ட பொதுத்துறைகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விலை பேசுவதை எதிர்த்தும் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் பல லட்சம் தொழிலாளர்களை அணிதிரட்டி நவம்பர் 9 முதல் 11 வரை நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்திருப்பதை விளக்கி கூறினர்.

மேலும், இப்போராட்டத்தையொட்டி திருப்பூரில் இருந்து பல ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டது. இதில் மத்தியத் தொழிற்சங்
கங்களின் நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.