திருப்பூர், செப்.22-
திருப்பூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை அடைக்க வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் காந்திநகரில் இருந்து தியாகி பழனிசாமி நகர் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை எண் 1961 மற்றும் 2279 ஆகிய இரு மதுபானக் கடைகள் உள்ளன. குடியிருப்பு பகுதியில் போக்குவரத்து அதிகமுள்ள இப்பகுதியில் மேற்கண்ட இரு கடைகளுக்கு வரும் மது பிரியர்களால் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே இந்த கடைகளை அகற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பழனிசாமி நகர் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், நகரச் செயலாளர் எம்.ஜீவானந்தம், வடக்கு நகரத் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், கிளைச் செயலாளர் ஆர்.ஆறுமுகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த  ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 60க்
கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.